கரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ 4 கோவிட் மையங்கள் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சி கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களின் உடல்நல விவரங்கள் மற்றும் பிற தகவல்களை பெற கோவிட் உதவி மையங்கள் 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உதவி மையங்களின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

கோவிட்-19 உதவி மையங்களின் எண்கள்:

1 அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 94999 66103

2 ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 78258 84974

3 அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 044-2836 4964 044-2836 4965

4 அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 044-2528 1350

பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையர் பிரகாஷ், கேட்டுக்கொண்டுள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்