சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது புதிய ரயில்பாதையை ரூ.300 கோடியில் அமைக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே தற்போது 2 தண்டவாளப் பாதைகளில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது புதிய பாதை அமைக்க வேண்டுமென தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் கரோனா பாதிப்பால் நிதி நெருக்கடி காரணமாக புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்துவதில் ரயில்வே வாரியம் தயக்கம் காட்டி வருகிறது. இதற்கிடையே, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது புதிய பாதைக்கு மண் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு சுமார் ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இதர மாநிலங்களின் ரயில்கள் சென்னை கடற்கரைமற்றும் எழும்பூர் வழியாக செல்ல போதிய ரயில் பாதை இல்லாததால், கூடுதல் ரயில்களை இயக்குவதில் சிக்கல்ஏற்படுகிறது. எனவே, இந்ததடத்தில் புதியபாதை மிகவும்அவசியமானதாக இருக்கிறது.
எனவே, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3கிலோ மீட்டர் புதிய ரயில்பாதை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து, போதிய நிதிஒதுக்கீடு செய்ய வேண்டுமென ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago