மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரும்பும் அனைவருக்கும் இன்று முதல் இ-பாஸ்: ஆதார் அல்லது குடும்ப அட்டை, கைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் கிடைக்கும்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலை யில் மாவட்டம்விட்டு மாவட்டம் செல்ல விரும்புவோர் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரம், கைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது பல்வேறு தளர்வுகளு டன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது 7-வது கட்டமாக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏராளமான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டபோதே, பொதுமக்கள் வெளியில் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக தாங்கள் வசிக்கும் மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்துக்கு செல்வது தடை செய் யப் பட்டது. அதேநேரம் மிக நெருங்கிய உறவினர் திருமணம், மரணம், அவசர மருத்துவ சிகிச்சை ஆகிய காரணங் களுக்காக மட்டும் வெளிமாவட்டங்கள் செல்ல இ-பாஸ் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது. திருமண அழைப்பிதழ், மருத்துவ சிகிச்சைக் கான ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படுகிறது. முதலில் காவல் துறை வசம் இருந்த இந்த அதிகாரம் அதன்பின் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதவிர வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் தாங்கள் செல்ல வேண்டிய மாவட்டத் தின் ஆட்சியருக்கு விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று வந்தனர். அதன்பின் ஒவ்வொருமுறை ஊரடங்கு நீட்டிப்பின்போதும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வேலைக்கு செல்வோருக் கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் கிடைப்பதில்லை என்றும், முறைகேடாக பலருக்கு வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இடைத்தரகர்கள், டிராவல்ஸ் நிறுவனத்தினர் முறைகேடாகவும், போலியாகவும் பலருக்கு இ-பாஸ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தொற்று பரவல் அதிகரித்த நிலையில் போலி இ-பாஸ் அதிக அளவில் கண்டறியப்பட்டு, கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதையடுத்து, இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 7-ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின் போது, ஆகஸ்ட் 1 முதல் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் அந்த நடைமுறை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘பொதுமக்கள் முக்கிய பணிகளுக்காக தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் வழங்கப்படும். ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்கள், கைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், எவ் வித தாமதமும் இன்றி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும். பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங் களை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் பெற விண்ணப்பித்து பயணிக்கலாம். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங் களில் இருந்து தமிழகத்துக்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.

முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இ-பாஸ் நடைமுறை தளர்த்தப்பட்டாலும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு பொதுமக்களுக்கும் இருக் கிறது. அதனால், தேவையற்ற பய ணங்களை தவிர்த்து, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்