மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கும் அரசு விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிப்பது ஏன்?- ஹெச்.ராஜா கேள்வி

By இ.ஜெகநாதன்

‘‘மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கும் அரசு விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிப்பது ஏன்?’’ என பாஜக தேசிய செயலாளர் ஹெச்,ராஜா வினவியுள்ளார்.

அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர்.

இதற்கு வாரத்தில் 6 நாட்கள் அனுமதி அளித்துள்ள அரசு, ஆண்டிற்கு 6 நாட்கள் மட்டுமே இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது.

சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த முடிவை உடனடியாக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். அரசின் உத்தரவு மத சுதந்திரத்தில் தலையிடுகிற செயலாக உள்ளது. இது இந்துக்களை நசுக்கின்ற செயலாக நான் கருதுகிறேன்.

மதச்டங்குகளில் தலையிடுவதற்கு, அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. போகப்போக அறநிலையத்துறை அதிகாரிகளின் போக்கு அராஜகப் போக்காக மாறி வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி ஆடித் திருவிழாவிற்கு அனுமதி மறுத்துள்ளார். அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும், என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்