சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கரோனா: உயர் நீதிமன்றத்தில் தகவல்

By கி.மகாராஜன்

சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், பண மோசடி வழக்கில் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை என உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ராமநாதபுரம் போலீஸார் சம்மன் அனுப்பினர். இதனால் முன்ஜாமீன் கோரி ஞானவேல்ராஜா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஞானவேல்ராஜா தரப்பில் போலீஸ் விசாரணைக்கு 2 நாள் நேரில் ஆஜராகி 66 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

ஆக. 8-ல் ஞானவேல்ராஜாவுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த விபரம் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் ரூ. 2 கோடி டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, நீதிமணியிடம் இருந்து சினிமா வெளியீடு மற்றும் திரையரங்க உரிமைக்காக பணம் பெறப்பட்டதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே எந்த நோக்கத்திற்காக பணம் பெறப்பட்டது என்பதை மனுதாரர் தரப்பில் தெரிவிக்க வேண்டும் என்றார்.
பின்னர் விசாரணையை ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைத்து, அதுவரை ஞானவேல்ராஜாவை கைது செய்வதற்கான தடையை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்