2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (ஆக.14) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
1. சௌ.டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐபிஎஸ், கூடுதல் காவல்துறை இயக்குநர், தொழில்நுட்பப் பணிகள், சென்னை, முன்னாள் காவல் ஆணையர், மதுரை மாநகரம்
2. கி.சங்கர், ஐபிஎஸ், காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை
3. ச.சரவணன், காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திருநெல்வேலி மாநகரம்
4. ச.தீபா கணிகர், ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர், சேலம் மாவட்டம்
5. பி.ஜெகன்நாத், தலைமை காவலர் 19917, வேலைவாய்ப்பு மோசடி, மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல், சென்னை மாநகரம்
இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்க்கண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்களை வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
1. ஜி.நாகஜோதி காவல் துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல், சென்னை மாநகரம்
2. இரா.குமரேசன், காவல் துணை கண்காணிப்பாளர், 'கியூ' பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை
3. தி.சரவணன், காவல் உதவி ஆணையர், வடக்கு சரகம் (குற்றம்), சேலம் மாநகரம்
4. எஸ்.கே.துரை பாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர், காட்பாடி உட்கோட்டம், வேலூர் மாவட்டம்
5. ஈ.இளங்கோவன் ஜென்னிங்ஸ், காவல் ஆய்வாளர், ஓருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, திருச்சி மாநகரம்
6. பி.எஸ்.சித்ரா, காவல் ஆய்வாளர், மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம் , திருச்சி மாநகரம்
7. கா. நீலாதேவி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம், சிவகங்கை மாவட்டம்
8. ச.பச்சையம்மாள், காவல் ஆய்வாளர், அரக்கோணம் இருப்புப்பாதை காவல் நிலையம், இருப்புப்பாதை காவல் சென்னை
9. ப.உலகராணி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, திருநெல்வேலி
10. பி.விஜயலட்சுமி, காவல் ஆய்வாளர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு, திருநெல்வேலி
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.
மேற்கண்ட விருதுகள், முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago