திருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்

By இ.ஜெகநாதன்

திருச்சி - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடத்தை மின்மயமாக்குவதை அடுத்து தண்டவாளத்தின் உறுதித்தன்மையை அறிய நேற்று சோதனை ஓட்டம் நடந்தது.

திருச்சி-ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடத்தில் டீசல் இஞ்சின் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சி - ராமேஸ்வரம் வழித்தடத்தை மின்மயமாக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

மேலும் இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை 110 கி.மீ., வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 4 மாதங்களாக தண்டவாளத்தின் உறுதித்தன்மையை அதிகரிக்கும் பணியை ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இப்பணி முடிந்தநிலையில் நேற்று தண்டவாளத்தின் உறுதித்தன்மையை சோதிக்கும் வகையில் திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 110 கி.மீ. வேகத்தில் சோதனை ஒட்ட ரயில் 4 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.

இந்த ரயில் இடையில் எங்கும் நிற்காமல் காரைக்குடி, சிவகங்கை வழியில் ராமேஸ்வரம் சென்றது. அதேபோல் மாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றது. இதில் ரயில்வே இன்ஜினியர்கள் பயணித்து தண்டவாளத்தின் உறுதித்தன்மையை சோதித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்