சோமாலியா நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் 8 பேரை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 8 பேர் சோமாலியா நாட்டிற்கு மீன்பிடி ஒப்பந்த கூலிகளாகச் சென்று உணவின்றி தவிப்பதாக கிடைத்தத் தகவலை அடுத்து, தமிழக மீனவர் உரிமை பாதுகாப்பு இயகத்தின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்களது தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது இம்மீனவர்கள் கரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இன்றி, உணவின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் தீரன் திருமுருகன் விசாரித்ததில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சித்திரவேல்(27), முள்ளிமுனையைச் சேர்ந்த விஸ்வநாதன்(47), இவரது மகன் சேரன்(22), மாவூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்(28), மணிமாறன்(34), திருப்பாலைக்குடி காந்திநகரைச் சேர்ந்த பிரபு(27), நாகபட்டினம் மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சுரேஷ்(35), சிவகங்கை மாவட்டம் இடையமேலூரைச் சேர்ந்த ஒருவர் என 8 மீனவர்கள் சோமாலியா நாட்டில் தவிப்பதாக தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்கறிஞர் தீரன் திருமுருகன் கூறியதாவது, எட்டு மீனவர்களும் 25.10.19-ல் சோமாலியாவில் உள்ள பெர்பேரா நகரில் உள்ள ஒரு மீன் கம்பெனிக்கு ஒப்பந்த கூலிகளாக சென்றுள்ளனர். அங்கு கரோனா நடவடிக்கையால் வேலையின்றி, உணவுக்கு வழியில்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தங்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதனையடுத்து சோமாலியாவில் உள்ள இந்திய தூதரகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், தமிழக அரசு மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, நாகபட்டினம் மாவட்ட ஆட்சியர்களுக்கு இம்மீனவர்களை மீட்க வேண்டும் என கோரி மனு அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago