மணல் கடத்தல் வழக்குகளை நீதிமன்றம் மிகக் கவனமாக கையாள்கிறது. அதனால் அதிகாரிகள் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி சிவலூரைச் சேர்ந்த முருகேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
உடன்குடி தாலுகா குலசேகரன்பட்டினம், கள்ளிமொழி கிராமங்களில் குளங்களில் சவுடு மண் எடுக்க அனுமதி பெற்று, சட்டவிரோதமாக மணல் அள்ளி வருகின்றனர். சவுடு மண் எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இருப்பினும் அதிகாரிகளின் துணையுடன் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. குளங்கள் மட்டுமின்றி, அரசு புறம்போக்கு நிலங்கள், நத்தம் புறம்போக்கு இடங்களிலும் மணல் எடுக்கப்படுகிறது.
» நெல்லை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது
» ராணுவவீரர் மனைவி, தாயார் கொலை வழக்கை விசாரணை செய்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மாற்றம்
எனவே உடன்குடி தாலுகாவில் மணல் கடத்தலை தடுக்கவும், கடத்தலில் தொடர்புள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், சட்டவிரோத மணல் கடத்தல்களை தடுக்கக் கோரி தொடர்ந்து மனுக்கள் தாக்கலாகி வருகின்றன.
எனவே, இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலர், தொழில் துறை முதன்மைச் செயலர், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், நகராட்சி நிர்வாக துறை முதன்மைச் செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது.
மணல் கடத்தல் வழக்குகளை நீதிமன்றம் மிகுந்த கவனமாக அணுகி வருகிறது. இதனால் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம். எனவே மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? மணல் கடத்தலை தடுக்க தாலுகா மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மணல் கடத்தல் தொடர்பாக எத்தனை குற்றவியல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்? அந்த வழக்குகளில் நிலை என்ன? என்பது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
உடன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் எடுப்பது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த விசாரணையை செப். 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago