கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய முதல்வர் பழனிசாமி, 33.15 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.20.86 கோடி மதிப்பீட்டிலான கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் பழனிசாமி இன்று (ஆக.10) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் துறை, மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தோட்டக்கலை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட 8 துறைகளின் கீழ் அம்மா இருசக்கர வாகனம், முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, தனிநபர் கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன்கள் மற்றும் இதர கடன்கள் என 15 ஆயிரத்து 16 பயனாளிகளுக்கு 33.31 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்படவுள்ள மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், சுற்றுச்சுவர், அறிவியல் ஆய்வகம், பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்டவை என 20.86 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 60 கட்டிட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.15.16 கோடி மதிப்பீட்டில் 14 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆய்வு நடத்தினார். இக்கூட்டத்தில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு, மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, திட்ட இயக்குநர் பி.மகேந்திரன் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதையடுத்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாயி சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago