தருமபுரி நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி நெடுஞ்சாலையில் தொழிலாளர்கள் மண் அகற்றுவதை தடை செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
தருமபுரி நகரின் மையப் பகுதியான 4 ரோட்டில் இருந்து தெற்கு நோக்கி சேலம் நெடுஞ்சாலையும், வடக்கு நோக்கி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையும் பிரிந்து செல்கிறது. அதேபோல, கிழக்கு நோக்கி திருப்பத்தூர் நெடுஞ்சாலையும், மேற்கு நோக்கி ஒகேனக்கல் நெடுஞ்சாலையும் பிரிந்து செல்கிறது. இந்த சாலைகளில், விபத்துக்கள், போக்கு வரத்து நெரிசல் போன்றவற்றை தவிர்க்க குறிப்பிட்ட தூரம் வரை சென்டர் மீடியன் அமைக்கப் பட்டுள்ளது. அதேபோல, மீடியன் அமைந்துள்ள பகுதியில் ஆங்காங்கேகம்பங்கள் அமைக்கப்பட்டு சாலை விளக்குகளும் அமைக்கப் பட்டுள்ளன. காற்று, மழை உள்ளிட்ட காரணங்களாலும், வாகன போக்குவரத்தாலும் இந்த சாலைகளில் அவ்வப்போது மண் மற்றும் குப்பைகள் தேங்கி விடும். இவை காற்றில் பறந்து வாகன போக்குவரத்தின்போது புழுதி மண்டலமாக மாறி பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் மூலம் மண் மற்றும் குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படும். பணியின்போது, சாலையில் ‘ட்ராஃபிக் கோன்’ என்று அழைக்கப்படும் போக்குவரத்துக் கூம்புகள் வைக்கப்படும். இதுதவிர, ஒளிரும் தன்மை கொண்ட ஜாக்கெட்களை அணிந்தபடி சாலைகளில் தேங்கிய மண்ணை பணியாளர்கள் அகற்றுவர். ஆனால், கடந்த சில நாட்களாக தருமபுரி நகரில் சாலைகளில் தேங்கிய மண் மற்றும் குப்பைகளை அகற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் இதுபோன்ற பாதுகாப்பு விதிகள் எதையும் பின்பற்றாமல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தருமபுரியைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, ‘சாலைகளில் தேங்கிய மண்ணை அகற்றும் பணியாளர் கள், அப்பகுதியில் பணி நடக்கிறது என்பதை வாகனஓட்டிகளுக்கு உணர்த்தும் எந்த ஏற்பாடுகளையும் செய்யாமல் பணி செய்கின்றனர். இதனால் விபத்துகளுக்கு வாய்ப்புள்ளது. அந்த பணியாளர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படலாம். இதை தவிர்க்கும் வகையில், உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றி சாலைப் பணிகளை மேற்கொள்ளச் செய்ய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறையின் தருமபுரி உதவி கோட்ட பொறியாளர் குலோத்துங்கனிடம் கேட்டபோது, ‘160 ட்ராஃபிக் கோன், சேஃப்டி ஜாக்கெட் போன்ற வற்றை பணியாளர்களுக்கு வழங்கியுள் ளோம். சாலையில் பணியில் ஈடுபடும்போது இவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஒருசிலர் சில நேரங்களில் விதிகளை பின்பற்றாமல் பணியில் ஈடுபட்டு விடுகின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்று நிகழாதபடி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago