உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூலை மாதத்தில் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் 5020 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 4832 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் ஏப்ரல் மாதத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மூடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்களும் மூடப்பட்டன. வீடியோ கான்பரன்ஸ் வசதியில் அவசர வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
உயர் நீதிமன்ற கிளையில் ஜூன் மாத தொடக்கத்தில் நேரடி விசாரணை தொடங்கப்பட்டது. நீதிபதி, நீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது.
உயர் நீதிமன்ற கிளையில் வீடியோ கான்பரன்ஸ் வசதியில் கடந்த ஜூலை மாதத்தில் 5020 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 4832 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 1433 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 1363 மனுக்களுக்கும், 1389 குற்றவியல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 1333 மனுக்களுக்கும் தீர்வுகாணப்பட்டுள்ளது.
வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் கடந்த 2 மாதங்களாக வழக்கறிஞர்கள் குக்கிராமங்களில் இருந்தும், காரில் இருந்தவாறும், காரில் பயணம் செய்தபடியும் தங்கள் வாதங்களை திறம்பட எடுத்து வைப்பதாக நீதிபதி பாராட்டியுள்ளார்.
சில இடங்களில் இணையதள இணைப்பு சரியாக கிடைக்காத நிலையில் வழக்கறிஞர்கள் வழக்கை நடத்தும் ஆர்வம் காரணமாக இணைப்பு கிடைக்கும் பகுதிகளுக்கு சென்று வீடியோ கான்பரன்ஸ் வசதியில் வாதங்களை எடுத்து வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
» கரோனா ஊரடங்கால் சாதி சான்றிதழ் பெற அலையும் பழங்குடி மக்கள் கள ஆய்வில் தகவல்
» கரோனா அதிகரிப்பு; ஏனாமில் மட்டும் 3 நாட்கள் முழு ஊரடங்கு தொடக்கம்
சட்டவிரோத கிரானைட் குவாரி வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மேலூர் நீதித்துறை நடுவரால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கலான மனு மீதான இறுதி விசாரணையை பல காரணங்களை கூறி எதிர்த்தரப்பு இழுத்தடித்து வரும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பி.புகழேந்தி, ‘வீடியோ கான்பரன்ஸ் விசாரணை வழக்கறிஞர்களுக்கு வரமாக அமைந்திருப்பதாகவும், வீடியோ கான்பரன்ஸ் வசதியில் இறுதி விசாரணை நடத்தலாம்’ என்றும் தெரிவித்தார்.
மேலும் நீதிபதி தனது உத்தரவில், கன்னியாகுமரியில் குக்கிராமங்களில் இருக்கும் வழக்கறிஞர்கள் தாங்கள் கிராமத்தில் இருந்தபடியே டில்லியிலுள்ள உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், மதுரையில் உள்ள உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகளை சிறப்பாக எடுத்து வைக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago