சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரேநாளில் 1,100 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,138 ஆக இருந்தது. நேற்று மேலும் 284 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. எனவே இங்கு பாதிப்பு எண்ணிக்கை 11,422 ஆக உயர்ந்தது. இவர்களில் 8,507 பேர் குணமடைந்துள்ளனர். 146 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருந்தொற்று பாதிப்பு 16,986 ஆக இருந்தது. நேற்று வந்த பரிசோதனை முடிவுகளில் மேலும் 425 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் இம்மாவட்டத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,411 ஆக உயர்ந்தது. இவர்களில் 14,420 பேர் குணமடைந்துவிட்டனர். 302 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை 16,221 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று 391 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,612 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 12,929 பேர் குணமடைந்துவிட்டனர். 280 பேர் உயிரிழந்துள்ளனர்.
3 பெண் நீதிபதிகள்
பொன்னேரியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, குற்றவியல் நடுவர் என 3 பெண் நீதிபதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். நீதிமன்ற தலைமை எழுத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago