நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில், 208.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 31.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து முடிந்த 19 திட்டபணிகளை தொடங்கியும் வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து 5982 பயனாளிகளுக்கு 36.17 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
முன்னதாக வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும் , கரோனா நோய்த்தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் நெல்லை வந்த முதல்வருக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் மாவட்ட நிர்வாகம் , காவல்துறையினர் மற்றும் கட்சி பிரமுகர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதல்வர் முதல் தளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .
பின்னர் நடந்த நிகழ்ச்சியில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய திட்டமான தாமிரபரணி , நம்பியாறு கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டத்தின் 4-ம் நிலைப்பணிகள் , கடனாநதியின் காங்கேயன் அணைக்கட்டுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மாறன்குளத்தில் இருந்து கல்லூர் குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் திட்டம் , 6 பணிகளுக்கும், தென்காசி மாவட்டத்தில் ஊர்மேல் அழகியான் குளத்தில் இருந்து தண்ணீரு் கொண்டு செல்லும் கால்வாய் திட்டம் ராமநதியில் இருந்து ஆலங்குளம் பகுதிக்கு தண்ணீர் கொண்டுவரும் கால்வாய் திட்டம் என மொத்தம் இரண்டு மாவட்டங்களிலும் 208.30 கோடி ரூபாய் மதிப்பில் 8 புதிய பணிகளுக்கு அடிக்கல்நாட்டினார்.
இதனைத் தொடர்ந்த நெல்லை மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகம் , புதிய வகுப்பறைக்கட்டிடங்கள் அங்கன்வாடி கட்டிடங்கள் என 11 நடந்து முடிந்த திட்டப்பணிகளையும் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் வட்டத்தில் படுகை அணை திறப்பு , பள்ளிக் கட்டிடங்கள் என நடந்து முடிந்த 8 பணிகள் என மொத்தம் 31.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 19 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் வீட்டுமனைப்பட்டா, அம்மா இருசக்கர வாகனம் , வேளாண்மை எந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பில் 5982 பயனாளிகளுக்கு 36.17 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர் .
தொடர்ந்து வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago