விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி(62). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந் தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூருக்கு கொண்டுவரப்பட்டது.
அவரது தந்தை தொல்காப்பியன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே பானுமதியின் உடல் நேற்று முன்தினம் இரவு அடக்கம் செய்யப்பட்டது.
கரோனா தொற்று பாதிக்கப் பட்டு இறந்ததால், சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதில், திருமாவளவன், அவரது தாய், சகோதரர்கள், சகோதரிகள், பானுமதியின் மகள் மற்றும் மகன்கள், உறவினர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல்
முதல்வர் பழனிசாமிதனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘சகோதரியை இழந்து வாடும் திருமாவள வனுக்கும் அவரது குடும்பத்தா ருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago