ஆவடி அருகே ஓய்வு பெற்ற ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.4.80 லட்சம் மோசடி

By செய்திப்பிரிவு

ஆவடி அருகே ஓய்வுபெற்ற கனரக வாகன தொழிற்சாலை ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4.80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள வீராபுரம், ஏ.கே.ஏ. நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ்(64). இவர், ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வீராபுரத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

கடந்த 4-ம் தேதி மதியம் புஷ்பராஜின் செல்போனுக்கு வந்த அழைப்பில் இந்தியில் பேசிய நபர், தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு செல்போனுக்கு வந்துள்ள ஓ.டி.பி. எண்ணைக் கூறுமாறு கேட்டுள்ளார்.

புஷ்பராஜ் தன்னிடம் பேசுபவர் வங்கி அதிகாரி என நம்பி, ஓ.டி.பி. எண்ணை தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மேலும் சிலர் புஷ்பராஜை தொடர்பு கொண்டு ஓ.டி.பி. எண்ணை பெற்றுள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களில், புஷ்பராஜின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4.80 லட்சம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு தகவல் வந்துள்ளது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்