மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபடும் நபர்கள், திறனாளிகள், நிறுவனங்களுக்கு தேசிய விருது: விண்ணப்பிக்க அரசு அழைப்பு

By செய்திப்பிரிவு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபடும் தனி நபர்கள், மாற்றுத்திறனாளிகள், நிறுவனங்கள் என பல்வேறு துறையினருக்கு மத்திய அரசின் தேசிய விருது வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

“மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தேசிய அளவில் சிறப்பாக சேவை புரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியன தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்கள் மத்திய அரசின், சமூக நீதி மற்றம் அதிகாரம் வழங்கும் (மாற்றுத் திறனாளிகள் நலன்) அமைச்சகத்தால், கௌரவிக்கப்படவிருப்பதால் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு தேசிய விருதுகள் டிச.3 2020 அன்று புதுடெல்லியில் கீழ்குறிப்பிட்ட பிரிவுகளில் வழங்கப்படவுள்ளன.

1) மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிபவர்கள்/சுயதொழில் புரிபவர்கள் (Best Employees / Self Employed with disabilities) 2) சிறந்த பணியமர்த்தப்படும் அலுவலர் / நிறுவனம், ((Best Employers and Placement Officer or Agencyl) 3) மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பாக சேவை புரிந்த தனிநபர் / நிறுவனம், ((Best Individual and Institution working for the cause of persons with disabilities), 4) மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாகத் திகழ்பவர்கள் (Role Mode).

5) மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையிலான சிறந்த செயல்முறை ஆராய்ச்சி பணி/தொழில் நுட்பம் அல்லது கண்டுபிடிப்புகளுக்கு ( (Best Applied Research or Technologyl Innovation / Product Development aimed at improving the life of persons with disabilities) 6) மாற்றுத் திறனுடையோருக்கு தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்திய சிறந்த பணிக்காக (Outstanding Work in the Creation of Barrier-Free Environment for the Persons with Disabilities).

7) மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கிய சிறந்த மாவட்டம் (Best District in providing Rehabililtation Services ) 8) தேசிய மாற்றுத் திறனுடையோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் திட்டத்தினை செயல்படுத்தும் மாநில அளவிலான முறைப்படுத்தும் நிறுவனம் (Best State Channelizing Agency of the Natilonlal Handicapped Finance and Development Corporation ).

9) சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனுடைய நபர்கள் (Outstanding Creative Adult Persons with disabilities) 10) சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனாளி குழந்தைகள் (Best Creative Child with Disabilities) 11) சிறந்த பிரெய்லி அச்சகம் (Best Braille Press) 12) மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய சிறந்த இணையதளம் (Best Accessible Website).

13) மாற்றுத் திறனாளிகளின் அதிகார பகிர்வினை ஊக்கப்படுத்தும் சிறந்த மாநிலம் (Best State in promoting empowerment of persons with disabililties and Implementation of Accessible India Campaign) மற்றும் 14) சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் (Best Sports persons with disabilities) ஆகிய 14 பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் / நிறுவனங்கள் இதற்கான விவரங்களை www.disabilityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், உரிய விண்ணப்பப் படிவத்தை இணைய தளத்தில்

இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான நல ஆணையர் அலுவலகம், காமராஜர் சாலை, சென்னை – 05 ஆகியவற்றிலிருந்து பெற்று தக்க இணைப்புகளுடன் வருகிற ஆகஸ்டு 15/2020 க்குள் 2 நகல்களில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களின் பரிந்துரையுடன் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர், எண். 5, லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகஸ்டு 15 / 2020 க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது”.

இவ்வாறு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் தரப்பு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்