தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜையில் ஈடுபட்ட காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 
தமிழகம்

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-வதுபீடாதிபதியாக இருந்து சித்தியடைந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 86-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த விழாவையொட்டி மடத்தின் அனைத்து கிளைகளிலும் ஸ்ரீ ராம ஷடாக் ஷரி ஜபமும் ஹோமங்களும் நடைபெற்றன. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வேதபாராயணம், ஏகாதச ருத்ர ஜபஹோமம், ராம ஷடாக் ஷரி ஜப ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து விசேஷ பூஜை, ஆராதனை அபிஷேகம் ஆகியவையும் நடைபெற்றன. மாலையில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தேனம்பாக்கத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் வேத பாராயணம், ஹோமங்கள், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.

அவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் படத்துக்கு மலர்களால் அர்ச்சனை செய்தார்.ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தியையொட்டிகாமாட்சி அம்மன் கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. கரோனா அச்சத்தால் பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT