நடுக்கடலில் மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் புதன்கிழமை மீட்கப்பட்டு கரை திரும்பினர்.
ராமேசுவரம் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் கடந்த திங்கட்கிழமை 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
செவ்வாய்க்கிழமை காலையில் விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பிய நிலையில் பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற முனியசாமி, சாகுல் ஹமீது, திரவியம் உள்பட ஏழு மீனவர்கள் மட்டும் செவ்வாய்கிழமை மாலை வரையிலும் கரை திரும்பிவில்லை.
உடனே மீனவர்களை மீட்க வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்களின் சார்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு விசைப்படகில் 14 மீனவர்களைக் கொண்ட மீட்புக் குழுவினர் மாயமான மீனவர்களை தேடிச் சென்றனர்.
மீட்புக் குழுவினர் கடலில் தேடிக் கொண்டிருக்கும் போது இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் வயர்லெஸ் ரேடியோ மூலம் அளித்த தகவலின்படி மாயமான 7 மீனவர்களையும் படகினையும் நெடுந்தீவு அருகே மீட்புக் குழுவினர் மீட்டனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் புதன்கிழமை மாலை ராமேசுவரம் திரும்பினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago