வேதா நிலையம் அரசுடைமை வழக்கு: விசாரணை நாள் தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை தமிழக அரசு அரசுடைமையாக்கியதை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் நாளை மறுதினம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில்உள்ள வேதா நிலையம் இல்லத்தைஅரசுடைமையாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 68 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தங்களின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு போயஸ் கார்டன்வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிஉள்ளது. ஆகவே, அதுதொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், ஜெயலலிதா பயன்படுத்திய விலை மதிக்க முடியாத ஆபரணங்கள், கலைப் பொக்கிஷங்கள் உள்ளிட்ட அசையும் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகளான ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வழக்கறிஞர்கள் ஆஜராக முடியவில்லை என்பதால் விசாரணையை நாளை மறுதினம் (ஆக.7) தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்