வீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது மக்கள் புகார்

By செய்திப்பிரிவு

திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரை சேர்ந்தவர் பின்ன லாடை நிறுவன உரிமையாளர் கே.சுப்ரமணியம் (38). இவர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.

சுப்ரமணியம் அளித்த புகாரில், ‘திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் செயல்பட்டு வந்த மக்கள் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடு கட்ட கடன் வசதி மற்றும் பாதி பணம் செலுத்தினால் உடனடி கிரயம் செய்து வீடு கட்டி தரப்படும், ரூ.50 ஆயிரம் முன்பணம் என்றும், ரூ.8 லட்சம் மற்றும் ரூ.11.5 லட்சம் மதிப்பில் வீடுகள், மத்திய அரசு மானியத்துடன் கட்டித் தரப்படும் என்றும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இதைப் பார்த்து, அந்த அறிவிப்பில் இருந்த அலைபேசி எண்ணுக்குஅழைத்தபோது, அலுவலகத்துக்கு நேரில் வர அறிவுறுத்தினர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி அலுவலகத்துக்கு சென்ற போது, மணிமாறன், அவரது மனைவி சுகன்யா உட்பட 10 பேர்இருந்தனர். இருவரும், தாங்கள்வெளியிட்ட அறிவிப்பு உண்மைஎன்றும், முன்தொகை செலுத்தி னால் அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்களது அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை திட்டத்தில் வீடு கட்டித் தரப் படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அதே மாதம் 16-ம் தேதி ரூ.15 ஆயிரம் முன்பணம் செலுத்தினேன். அடுத்து 3 தவணைகளில் ரூ.5 லட்சத்து 15 ஆயிரம் செலுத்தினேன். பிறகு மீத தொகையை தயார் செய்துவிட்டு, கிரயம் செய்து கொடுக்க கேட்டதற்கு காலம் தாழ்த்தி வந்தனர். ஓராண்டாக ஏமாற்றி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அருகில் வசிப்போ ரிடம் விசாரித்ததில், அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கிடைத்தது. சுகன்யா, மணிமாறனின் அலைபேசி எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கு அழைத்தால் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் தனித் தனி புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்