மன அழுத்தத்தைப் போக்க தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு 6 மையங்களில் ஆன்லைன் பயிற்சி வகுப்பு: 30 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு மன அழுத்தத்தைப் போக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. மாவட்டத்தில் 6 மையங்களில் இந்த பயிற்சி வகுப்பு 30 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் வரையில் உள்ளவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று காலத்தில் எழும் சவால்களை எதிர்கொள்வது குறித்தும், மன அழுத்தத்தை போக்குவது குறித்தும் ஒரு நாள் ஆன்லைன் பயிற்சி அளிக்க தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் (பயிற்சி) உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலர்கள் முதல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் வரை தினமும் 6 மையங்களில், ஒரு மையத்துக்கு 30 பேர் என தினமும் 180 பேர் வீதம் 30 நாட்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி தனிப்பிரிவு, ஆயுதப்படை மற்றும் மணியாச்சி துணை கோட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கிலும், தூத்துக்குடி துணை கோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலும், தூத்துக்குடி ஊரகம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் துணை கோட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு சாயர்புரம் போப்ஸ் கல்லூரியிலும், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் துணை கோட்டங்களில் உள்ளவர்களுக்கு திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி மையத்திலும், கோவில்பட்டி துணை கோட்டத்தில் உள்ளவர்களுக்கு கோவில்பட்டி வேல் மேல்நிலைப்பள்ளியிலும், விளாத்திக்குளம் துணை கோட்டத்தில் உள்ளவர்களுக்கு எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியிலும் ஆன்லைன் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆன்லைன் பயிற்சியை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சென்னை மனநல மருத்துவர்கள் கண்ணன், சித்ரா அரவிந்தன், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்கள் சித்தனாதன், கருணாநிதி, ஓய்வு பெற்ற கூடுதல் கண்காணிப்பாளர் பரந்தாமன், சென்னை போலீஸ் அகடாமியின் துணை கண்காணிப்பாளர் லெட்சுமி காந்தன், அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நாகராஜன், ஆத்மரஞ்சன் யோக வித்யாலயா பயிற்சியாளர் பிரகாஷ், சென்னை மனவளக்கலை மன்ற பயிற்சியாளர் சிவக்குமார், பிசியோதெரபிஸ்ட் ரவி சாமுவேல் ஆகியோர் ஆன்லைன் மூலம் இந்த பயிற்சியை அளிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்