தமிழகத்தின் மின் தேவை குறைந்ததால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 அலகுகள் நிறுத்தம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மூன்று அலகுகளில் 630 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறனுடன் 5 அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் 5-வது அலகு கடந்த 3.11.2019 முதல் பழுதாகியுள்ளது. இந்த பழுதை சரி செய்ய வேண்டிய உதிரி பாகம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பழுதை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் மின் தேவை குறைவு காரணமாக 3-வது அலகு கடந்த 31.7.2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2-வது அலகும் இன்று காலை 11 மணியளவில் திடீரென நிறுத்தப்பட்டது.

மின்தேவை குறைவு காரணமாக மின்வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த அலகும் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று அலகுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 1 மற்றும் 4-வது அலகுகளில் மட்டும் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்