ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள 4 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. 199.27 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது நிரம்பியுள்ளது.
இதனால், கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து நேற்று முன்தினம் விநாடிக்கு 120 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, விநாடிக்கு 600 கன அடி நீர்நேற்று அதிகாலை 3.30 மணிவரை திறக்கப்பட்டது. பிறகு, கிருஷ்ணாபுரம் அணை மூடப்பட்டது.
இந்த தண்ணீர் குசா மற்றும் லவ ஆறுகள் வழியாக, பள்ளிப்பட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றுக்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு வந்தடைந்தது. கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரால் பள்ளிப்பட்டு வட்டத்தில் தளவாய்பட்டடை, நெடியம், புண்ணியம், சாமந்தவாடா ஆகிய இடங்களில் உள்ள 4 தரைப்பாலங்கள் மூழ்கின.
பூண்டி ஏரிக்கு செல்லும்
இதனால், தரைபாலங்களுக்கு அருகே வருவாய் மற்றும்காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இன்னும் ஒரு வாரத்தில் பூண்டி ஏரியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உபரி நீர் வெளியேற்றத்தால் நேற்று காலை நிலவரப்படி, கிருஷ்ணாபுரம் அணையில் 166.62 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆந்திர பகுதியில் மழை அதிகரித்தால், கிருஷ்ணாபுரம் அணை மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago