கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரிப்பதன் எதிரொலியாக, செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் கூடுதலாக 200 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 380 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா வார்டும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வார்டும் உள்ளது.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று வரை மாவட்டத்தில் 14,866பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 200 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சுகாதார அலுவலர் ஒருவர் கூறியதாவது: தற்போது கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதையடுத்து ரூ. 50 லட்சம் செலவில் செங்கல்பட்டு மருத்துவமனையில்கூடுதலாக 200 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்டநிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago