ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமலாகிறது.

தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு ஜூலை 31 வரை அமலில் உள்ளது. சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு ஜூலை 31 அன்று முடிவைடைய உள்ளது.

இதையடுத்து முதல்வர் பழனிசாமி நேற்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்டங்களில் பெருகி வரும் தொற்று குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட அளவில் தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை அமல்படுத்துவதா? எவை எவைக்குத் தளர்வு அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதேபோன்று இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தற்போது ஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பாஸ் கட்டாயம். பொதுப் போக்குவரத்துக்குத் தடை, திரையரங்குகள், பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள், ஊர்வலங்களுக்குத் தடை தொடர்கிறது. கடைகளை இரவு 7 மணிவரை திறந்து வைக்க அனுமதிக்கப்படுகிறது. பேருந்துகள், ரயில்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்