கரோனா தொற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 15-ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விண்ணப்பப் பதிவிற்கான கடைசி நாள் ஆகஸ்டு 16 ஆகும். இதுநாள்வரை 1,21,008 மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். அதில் 93,383 மாணவர்கள் இணையதள வாயிலாகத் தங்களது பதிவுக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.
மேலும் இதுநாள் வரை 1,768 மாணவர்களுக்குத் தொலைபேசி மூலமும், 4,556 மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2020 ((TNEA-2020) தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 2019-ம் ஆண்டின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் வாயிலாக நடைபெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்வதற்காக மாணவர்கள் TFC மையங்களுக்கு நேரடியாக வரவேண்டிய சூழ்நிலை இருந்தது.
இம்முறை, கரோனா தொற்றிலிருந்து மாணாக்கர்களைப் பாதுகாக்க ஏதுவாக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு, இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் பதிவேற்றம் வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்டு 20 வரை நடைபெற உள்ளது.
மாணாக்கர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்களில் அவர்களின் கைப்பேசி அல்லது கணினி மூலம் வீட்டிலிருந்தபடியே சான்றிதழ்களை www.tneaonline.org இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு வரிசை எண்களின் அடிப்படையில், இரண்டு நாட்களில் 20,000 மாணாக்கர்கள் வீதம், சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் பதிவேற்றத்திற்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
மாணவர்களுக்கு TNEA இணையதளத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் பதிவு எண் முதல் முடிய முதல் முடிய
1. 31/07/2020 முதல் 01/08/2020 வரை 200001 ---- 220000
2. 02/08/2020 முதல் 03/08/2020 வரை 220001 ---- 240000
3. 04/08/2020 முதல் 05/08/2020 வரை 240001 ---- 260000
4. 06/08/2020 முதல் 07/08/2020 வரை 260001 ----- 280000
5. 08/08/2020 முதல் 09/08/2020 வரை 280001 ----- 300000
6. 10/08/2020 முதல் 11/08/2020 வரை 300001 ----- 320000
7. 12/08/2020 முதல் 20/08/2020 விடுபட்ட மாணாக்கர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டிய நாட்கள்
மேலும், மாணாக்கர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்களில் சான்றிதழ் பதிவேற்றம் செய்துகொள்ள முடியாதவர்கள் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை தங்களின் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044-22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
மாணாக்கர்கள், பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக, தங்களது சான்றிதழ்களை டிஜிட்டல் ஃபார்மட் ஆக மாற்றுவது மற்றும் அவர்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்றவற்றை இமேஜ் ஃபார்மட் ஆக மாற்றுவது குறித்த வழிமுறைகள் அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் "instructions" மூலமாகவும் மற்றும் வீடியோ மூலமாகவும் www.tneaonline.org இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.
TNEA இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சான்றிதழ்களை அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் அந்தந்த TFC மையங்களில் 24.08.2020 முதல் 01.09.2020 வரை சரிபார்க்கப்படும். மாணாக்கர்கள் நேரில் வரவேண்டிய அவசியமில்லை. சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவடைந்ததும் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணாக்கர்களின் பார்வைக்கு www.tneaonline.org இணையதள முகவரியில் தெரிவிக்கப்படும்”.
இவ்வாறு அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago