திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் ஒன்றியங்களை இரண்டாகப் பிரித்து ஒரு ஒன்றியத்திற்கு இரண்டு ஒன்றியச் செயலாளர் களை நியமிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இதற்கான நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து ஒப்புத லுக்காக அதிமுக தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் விதமாக முதலில் கட்சியைப் பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் அதிமுக ஈடுபட்டுள்ளது. கட்சி நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறது. யாருக்கும் அதிருப்தி ஏற்படாத வகையில் அனைத்துத் தரப்பினரையும் அனுசரித்துச் செல்லும் வகையிலும் புதிய நிர்வா கிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு மாவட்டங்கள் இரண்டு மற்றும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக் கப்பட்டனர். இதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு அதிமுகவில் ஒரு மாவட்டச் செயலாளர் இருந்த நிலையில் தற்போது கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.
மாவட்டச் செயலாளருக்கு அடுத்த பதவியான ஒன்றியச் செயலாளர் பதவிகளையும் மாநிலம் முழுவதும் அதிகப்படுத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் தற்போது ஒன்றியத்துக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் பதவி உள்ளது. கொடைக்கானலில் மட்டும் மேல்மலை, கீழ்மலை ஒன்றியம் என இரண்டு ஒன்றியச் செயலாளர் பதவிகள் உள்ளன.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களையும் பிரித்து இரண்டு ஒன்றியச் செயலாளர்களை நியமிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் 28 ஒன்றியச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஒன்றியமும் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து நிர்வாகிகள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைமை ஒப்புதல் கிடைத்தவுடன் முறைப்படி ஒன்றியச் செயலாளர் பதவிக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago