ராமநாதபுரம் அருகே கரோனாவால் உயிரிழந்த இந்துக்கள் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் கீழக்கரை இஸ்லாமியர்கள்: மதங்களைக் கடந்த மனிதநேயம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் பகுதியில் கரோனா வால் உயிரிழந்த இந்துக் களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் இஸ்லாமிய இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கரோனாவால் இறந்தவர் களின் உடல்களை அவர் களது குடும்பத்தினரே வாங்க மறுக்கின்றனர். இதற்குக் காரணம் தொற்று பரவிவிடும் என்ற அச்சம்தான்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த முகம்மது நசுருதீன்(25), அஹமது அசாருதீன்(25), அப்துல் பாசித்(25), ஆரிஃப் (22), முகம்மது பர்னாஸ்(18), பஷல்(26) ஆகிய ஆறு பேர் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை குறிப்பாக இந்துக்கள் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து முகம்மது நசுருதீன் கூறியதாவது:

கடந்த ஆறு ஆண்டுகளாக அவசர ஊர்தி ஓட்டுநராகப் பணிபுரிகிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர். இந்தச் சேவையில் என்னோடு ஆறு தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து கரோனாவால் இறந்தவர்களின் உடல்களைப் பெற்று அரசின் வழிகாட்டுதல்படி முகக்கவசம், கையுறை உள்ளிட்டவற்றை அணிந்துகொண்டுதான் உடலை அடக்கம் செய்கிறோம். இதற் காகக் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. எந்த சாதி, எந்த மதமாக இருந்தாலும் பாகுபாடின்றி அவர்களின் சாதி, மதப்படி இறுதிச் சடங்கைச் செய்கிறோம் என்றார். இஸ்லாமிய இளைஞர்களின் இந்த மனிதநேயமிக்க செயல்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்