சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை குறித்து ஆழ்ந்த ஆய்வு தேவை என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 29) வெளியிட்ட அறிக்கை:
"சூழலியல் தாக்கம் மதிப்பீட்டுச் சட்டம் மத்திய அரசால் 2006-ல் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தில் பல திருத்தங்கள் செய்து, சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா 2020 என்ற புதிய மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
இப்புதிய மசோதாவை நிறைவேற்றும் முன்பு, கீழ்க்காணும் அம்சங்களை சுற்றுச்சூழல் அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. வேளான் நிலங்கள், காடுகள், நீர்நிலைகள், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது. நில ஆக்கிரமிப்புக்கு முன்பு மக்கள் கருத்தை அறிய வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர் குழு மற்றும் மாநில அரசின் கருத்தையும் பெற வேண்டும். புதிய மசோதாவில் மேற்கொள்ள இருக்கும் திருத்தங்களால் இயற்கை வளம் பாதிக்கப்படக் கூடாது. மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது.
» ஆதரவற்று இறப்பவர்களை அடக்கம் செய்யும் இளைஞர்: கரோனா காலத்திலும் மதுரையில் தொடரும் மனிதநேயம்
மேற்கண்ட பாதுகாப்பு அம்சங்களை வரைவு சட்டத் திருத்தத்தில் சேர்ப்பதற்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago