ஒரே நாளில் 381 பேருக்கு கரோனா: தூத்துக்குடியில் 6000-ஐ கடந்தது பாதிப்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 381 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,278 ஆக அதிகரித்துள்ளது.

மூன்று நாட்களில் 1000-க்கும் அதிகமானோர் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று ஏற்பட்டு 36 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் 9 அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சுங்கத்துறை அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்துக்கு எதிரேயுள்ள கடைகள் நேற்று முன்தினம் இரவு 9 மணியை தாண்டி நீண்ட நேரமாக திறந்திருந்துள்ளது.

இதனை அந்த வழியாக ரோந்து சென்ற எஸ்பி ஜெயக்குமார் பார்த்து நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில் 4 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை சீல் வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்