‘கலாம் காலிபர் ஷூ’வுக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள்: கருணை காட்டுமா நலத் துறை?

By ஜி.ஞானவேல் முருகன்

மெட்டல் மற்றும் பிளாஸ்டிக் காலிபர் பயன்படுத்துவோருக்கு எடை குறைவான ‘கலாம் காலி பர் ஷூ’வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

2005-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தன்னை வரவேற்க வரிசையில் நின்றிருந்த மாற்றுத்திறன் இளைஞரின் அருகில் சென்று, அவர் அணிந்திருந்த காலிபர் ஷூவைக் காட்டி, இப்போ இது உனக்கு வசதியாக இருக்கிறதா? என கேட்டவுடன் அவர் ஆனந்தக் கண்ணீர் மல்க கலாமின் கை களைப் பற்றிக்கொண்டார்.

காரணம் அந்த இளைஞர் அணிந்திருந்தது கலாம் பரிந்துரை செய்த எடை குறைவான காலி பர் ஷூ. போலியோவால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் பயன்படுத்தும் காலிபர் ஷூ, 3 முதல் 5 கிலோ எடையில் மெட்டல் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆனதாக இருக்கும். இந்த காலிபர்களை அணியவும், நடக்கவும் மாற்றுத்திறனாளிகள் படும் வேதனையை மற்றவர்களால் உணர முடியாது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் காலிபரின் மேல் விளிம்பு தொடையிலும், மூட்டிலும் முட்டி மோதி கடுமையான வலியை ஏற்படுத்தும்.

இத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஏவுகணையின் எடையைக் குறைக்க பயன்படுத் தப்படும் பாலி புரோபைலின் எனப்படும் ‘தெர்மோ பிளாஸ்டிக் பாலிமரை’ கொண்டு வெறும் 400 கிராம் எடையில் காலிபர் ஷூவை அப்துல் கலாம் உருவாக்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையினர் தற்போது வழங்கும் எடை அதிகம் கொண்ட மெட்டல், பிளாஸ்டிக் காலிபர்களைத் தவிர்த்து, கலாம் பரிந்துரைத்த எடை குறைவான காலிபர் ஷூ வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு நலச்சங்கத் தலைவர் அப்துல் சலாம் கூறியபோது, “அரசு இலவசமாக வழங்கும் காலிபர்களைப் பயன்படுத்துவோர் ஏழைகள் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். டெண்டர் மூலம் காலிபர் ஷூ தயார் செய்பவர்களை தேர்ந்தெடுக்கும் நலத்துறைக்கு எங்கள் வலி தெரியாது. ஒரு ஷூவுக்கு அதிகபட்சம் ரூ.3 ஆயிரம் பட்ஜெட் என்பதால் அவர்களால் 3, 4 கிலோ எடையில்தான் வழங்க முடியும்.

அப்துல் கலாம் பரிந்துரைத்த எடை குறைவான பாலிபுரோபைலின் கலவையால் செய்ய வாய்ப் பில்லை. வசதி படைத்தவர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்து தனியாரிடம் மிகவும் எடை குறைவான காலிபர் ஷூக்களை வாங்கிக் கொள்கின்றனர். அதற்கு வழியில்லாதவர்கள் வலியுடன் வாழ்க்கையை நகர்த்துகின்றனர். தற்போது அரசு ஒரு காலிபர் ஷூவுக்கு வழங்கும் தொகையுடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கொடுத்தால் கலாம் காலிபர் ஷூ ஏழை எளியோருக்கும் சாத்தியமே” என்றார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் 2.1 சதவீதம் மாற்றுத்திறனாளிகளில் காலிபர் ஷூ பயன்படுத்துவோர் 8 ஆயிரம் பேர் கூட இருக்க மாட்டார்கள். கலாம் காலிபரை, ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு நிறுவனம் மூலம் சிறப்பு முகாம் நடத்தி ஏற்கெனவே வழங்கியுள்ளோம். கலாம் காலிபர் ஷூ வழங்குவதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. அரசின் கவனத்துக்கு உயரதிகாரிகள் தெரிவிக்கும் பட்சத்தில் டெண்டர் தொகையை உயர்த்தி எடை குறைவான கலாம் காலிபர்ஷூ வழங்க வழி செய்யலாம்” என்றார்.

காப்புரிமை பெறாத கலாம்

மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ. பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு மூலம் சக விஞ்ஞானிகளுடன் இணைந்து நாட்டுக்காக எத்தனையோ உயர் தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கிய கலாம், தனது கண்டுபிடிப்புகளில் பெருமையாகக் கருதுவது மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கிய எடை குறைவான காலிபர் ஷூவைத்தான்.

பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் சென்றடையும் நோக்கிலேயே இதற்கான காப்புரிமையை கலாம் பெறவில்லை. எனவேதான் இந்த எடை குறைவான காலிபர் ‘கலாம் காலிபர்’ என அழைக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்