சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அதைநடைமுறைப்படுத்தும் பணிகளைஒருங்கிணைக்கும் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது ஈஷா அறக்கட்டளைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்மூலம், ஐ.நா சுற்றுச்சூழல் பேரவை மற்றும் அதன் துணைஅமைப்புகளில் ஈஷா அறக்கட்டளை பார்வையாளராக பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளது.
மேலும், சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல் குழுக்களின் சந்திப்புகளில் பங்கேற்பது, பல்வேறு நாட்டு அரசாங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவது மற்றும் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்கும் பணிகளில் ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும்.
இதுதொடர்பாக, சத்குரு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது, ஈஷா அறக்கட்டளையை ஐ.நா. சுற்றுச்சூழல் பேரவையில் பங்கேற்க அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டங்களை பலப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.
நதிகளை மீட்போம் இயக்கம் தற்போது இரு களப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. காவிரி நதிக்குப் புத்துயிரூட்ட தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘காவேரி கூக்குரல்’ திட்டமும், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ‘வஹாரி’ நதி புத்துயிரூட்டும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago