தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாகப் பணியாற்றிய 14 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
கடந்த 21.07.2020 அன்று இரவு தூத்துக்குடி கேடிசி நகர் பகுதியில் பிரேம்குமார் (27) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட 6 குற்றவாளிகளையும் 24 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர்கள் முத்துகணேஷ், நம்பிராஜன், ராஜபிரபு, ராஜா, முதல் நிலைக்காவலர்கள் முத்துமணி, கலைவாணர், சுப்பிரமணியன், காவலர் கண்ணன் ஆகியோருக்கு எஸ்பி ஜெயக்குமார் இன்று பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
அதுபோல இணையதள மோசடி மூலம் பணத்தை இழந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.57,179 பணம் திரும்ப கிடைக்கச் செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுதாகரன், காவலர்கள் எடிசன், புவனேஷ், ஷாபு, சதீஷ்குமார் ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி எஸ்பி பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago