கரோனா பரவல் எதிரொலி: திருச்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?- மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுரை

By கி.மகாராஜன்

கரோனா பரவல் அதிகரிப்பால் திருச்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தால் விசாரிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் வழக்கறிஞர் வழக்கறிஞர் திருச்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக அவர் நீதிபதிகளிடம் முறையிடும் போது, திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் தொற்று பாதித்துள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் திருச்சி கிளை சார்பில், திருச்சியில் கரோனா சமூக பரவலைத் தடுக்க உடனடியாக 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். இருப்பினும் திருச்சி மாவட்ட நிர்வாகம் முழு ஊரடங்கை அமுல்படுத்த தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

கரோனா தொற்றால் இதுவரை 5 மருத்துவர்கள் இறந்துள்ளனர், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் உட்பட 75 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்திய மருத்துவ கழகதின் திருச்சிக் கிளை பரிந்துரை படி திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதனை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு நீதிபதிகள், இது தொடர்பாக மனுதாரர் மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்