கந்து வட்டி புகாரில் அதிமுக பிரமுகர் திடீர் கைது

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (60). அதிமுக எம்ஜிஆர் மன்றத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளரான இவர், வட்டி தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கின்போதும், இவர் கொடுத்தப் பணத்தையும், வட்டியையும் வசூல் செய்து வந்த்தாகவும், வட்டிப் பணத்தை கொடுக்காதவர்களை வீட்டுக்கே சென்று மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில், வெங்கடேசன் 100 ரூபாய்க்கு 10 ரூபாய் வட்டி என்ற கணக்கில் கடன் கொடுத்து பணத்தை வசூல் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு வெங்கடேசனை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்