தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு; கடைகள் அடைப்பு: கடும் கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிய சாலைகள்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இம்மாதத்தில் 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பிற மாவட்டங்களிலும் தொற்று தீவிரமாக இருப்பதால், கட்டுப்பாடுகளை போலீஸார் கடுமையாக்கிய நிலையில் நகர்ப்புறங்களில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

சென்னையில் கடந்த மார்ச் மாத பிற்பகுதியில் இருந்து கரோனா தொற்று அதிகரித்து வந்தது.பின்னர் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தீவிரமடையத் தொடங்கியது. அதனால் சென்னை மற்றும்அதைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் கடந்த ஜூன் 19-ம் தேதிமீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தற்போது பிற மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருவதால், சென்னையைப் பின்பற்றி ஜூலை மாதம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இம்மாதத்தில் 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

சந்தைகளும் மூடல்

சென்னையில் நேற்று மருந்து, பால் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. திருமழிசை காய்கறிச் சந்தை, மாதவரம் பழச்சந்தை, காசிமேடு மீன் சந்தை ஆகியவையும் நேற்று செயல்படவில்லை. மாநகரம் முழுவதும் 193 இடங்களில் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து, அத்தியாவசிய காரணங்கள் இன்றிவாகனத்தில் சுற்றியவர்கள் மீதுவழக்கு பதிவு செய்தனர். இதனால் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் வாகன போக்குவரத்து மற்றும்மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், போலீஸார் கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அதன் காரணமாக திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, சாலைகள் அனைத்தும் வெறிச் சோடின. பல நகரங்களில் விதிகளை மீறி திறக்கப்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு உள்ளாட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

முடங்கிய மக்கள்

கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் மழை பெய்தது. ஆனால் நேற்று பரவலாக மழை இல்லாததால் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, சாலைகள் அனைத்தும் வெறிச் சோடின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்