கரோனா ஊரடங்குக்கு பிறகு பொது போக்குவரத்தை தொடங்குவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக சிட்டிசன் கன்சியூமர் அண்ட் சிவில் ஆக் ஷன் குரூப் (சிஏஜி) அமைப்பின் மூத்த ஆய்வாளர் என்.சுமணா கூறும்போது, ‘‘தமிழகத்தில் சாலைப் பாதுகாப்பு தொடர்பாக இணையதளம் வழியாகபல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறோம். பொதுபோக்குவரத்து வசதியை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம்.
தமிழகத்தில் சாலை பாதுகாப்புக்கு ஆண்டுதோறும் ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சாலை விரிவாக்கம், கட்டமைப்பு போன்ற பணிகளின் தேவை உருவாகியுள்ளதால், இந்த நிதியை உயர்த்த வேண்டும். கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு, சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். இதனால், சாலை விபத்துகள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஊரடங்கு முடிந்த பிறகு, பொது போக்குவரத்தை தொடங்குவதற்கான வழிமுறைகளை முன்கூட்டியே தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் வழிமுறைகளை பின்பற்ற முடியும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago