தமிழகத்தில் இன்று 6,986 பேருக்கு கரோனா: சென்னையில் 1,155 பேருக்குத் தொற்று; 5,471 பேர் குணமடைந்தனர்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 6,986 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய (ஜூலை 26) கரோனா தொற்று நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

''தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 6,986 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 64 ஆயிரத்து 129 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 23 லட்சத்து 51 ஆயிரத்து 463 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 62 ஆயிரத்து 305 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 22 லட்சத்து 62 ஆயிரத்து 738 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அரசு சார்பாக 58 மற்றும் தனியார் சார்பாக 58 என, தமிழகத்தில் மொத்தம் 116 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,471 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 49 பேர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 36 பேர் என மொத்தம் இன்று 85 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 3,494 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 75 பேர். இணை நோய்கள் அல்லாதவர்கள் 10 பேர்.

தற்போது வரை 53 ஆயிரத்து 703 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 26 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக, 2,011 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக, 78 ஆயிரத்து 940 பேர் வீடு திரும்பியுள்ளனர். 13 ஆயிரத்து 744 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்''.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்