தமிழகத்தில் தடை செய்யப்பட் டுள்ள பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள், கர்நாடக மாநிலத்தில் இருந்து மறைமுகமாக வாங்கி வந்து விற்பனை செய்வதால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக உள்ளூரில் களிமண்ணால் விநாய கர் சிலைகளைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரி வித்தனர்.
வருகிற 17-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப் படைந்துள்ளது. தமிழகத்தில் கிருஷ் ணகிரி, விழுப்புரம், திருவண்ணா மலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விநா யகர் சிலைகள் தயாரிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.
காகிதக்கூழ், கிழங்குமாவு மற் றும் களிமண்ணால் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் சிலை வடிவமைப்பு பணியை மேற்கொண்டு, தற்போது வர்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் தொழிலாளர்கள் ஈடு பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்கிற வேதி பொருளால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலை களை விற்பனை செய்ய, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித் துள்ளது. ஆனால் வெளி மாநிலங் களிலிருந்து வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலை களை சிலர் வாங்கி வந்து, தமிழகத்தில் விற்பதாக சிலை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை தயாரித்து வரும் தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான சிலைகளை ஜனவரி மாதம் முதல் தயாரித்து வருகிறோம். தற்போது சிலைகளை விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். இங்கு சிறியது முதல் 20 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளைத் தயாரிக் கிறோம். சிலையின் அளவுக்கு ஏற்ப ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகி றோம்.
நடப்பாண்டில், மூலப் பொருட் கள் விலை அதிகரிப்பு, கூலி ஆட் கள் பற்றாக்குறை போன்ற காரணங் களால் தயாரிப்பு செலவு அதிகரித் துள்ளது, இருந்தாலும், சிலைகளின் விலை உயரவில்லை. தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப் பட்டுள்ள சிலைகளை வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரி கள் வாங்கி வந்து அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக இவ்வகை சிலைகள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தயார் செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தில் ஓசூர் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் மூலம் இதுபோன்ற சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த சிலைகள் நீரில் கரையாமல், மண்ணிலும் மக்காமல் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை யுடையது. களிமண், கிழங்கு மாவு போன்றவை மூலம் ஒரு நாளைக்கு ஒரு சிலை தயாரித்தால், ரசாய னம் மூலம் தயாரிப்பவர்கள் ஒரு நாளுக்கு 20 சிலைகள் தயாரிக் கின்றனர். இதனால் நாங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள் சிலை விற்பனை செய்யும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago