வனத்துறை விசாரணையில் விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் அவரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (65). விவசாயம் செய்து வருகிறார்.
கடையம் அருகே உள்ள இவரது விவசாய நிலத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்ததாகக் கிடைத்த தகவலின்பேரில், கடையம் வனத்துறையினர் கடந்த 22-ம் தேதி இரவு அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், அணைக்கரை முத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அணைக்கரை முத்துவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அணைக்கரை முத்துவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்துக்கு ஆலங்குளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா வந்தார். அவரது தலைமையில் ஏராளமானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 8 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், அணைக்கரை முத்துவின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், 2வது நாளாக உடலை வாங்கவில்லை. அவர்களிடம் போலீஸாரும் வருவாய்த் துறையினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தி நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago