காரைக்கால் மாவட்ட மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டம்

By வீ.தமிழன்பன்

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மாவட்ட விசைப் படகு மீனவர்கள், இன்று கோரிக்கைகளை வலியுறுத்திப் படகுகளில் கருப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டீசலுக்கான மானியத்தை உயர்த்தித் தர வலியுறுத்தியும், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்க வருமானச் சான்று கேட்பதற்குக் கண்டனம் தெரிவித்தும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த 4,000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஜூலை 21-ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விசைப்படகு மீனவர்கள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளில் கருப்புக் கொடியேற்றியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் இன்று (ஜூலை 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மீனவக் கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளிலும், வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி கண்டனத்தைத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்