கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் எதுவும் நடத்த இயலாத வகையில் தற்போதுவரை கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், யூஜிசியும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையும் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டன. செப்டம்பர் மாதத்துக்குள் இறுதியாண்டுத் தேர்வை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, தமிழகம் இதுகுறித்து முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என, முதல்வர் பழனிசாமி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று (ஜூலை 23) காலை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். ஆனால், முதுநிலை இறுதியாண்டுத் தேர்வு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

இது தொடர்பாக, ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான இறுதிப் பருவம் தவிர்த்து, மீதமுள்ள அனைத்துப் பருவத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மாணவர் நலன் காக்கும் செயல்!

இதைத்தான் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பபது பாமகவுக்குக் கிடைத்த வெற்றி ஆகும். ஆனால், இது மட்டும் போதாது. இறுதிப் பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்!

இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு முதல்வர் எழுதிய கடிதத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் வரவில்லை என்றால், இறுதிப் பருவத் தேர்வுகளை தமிழக அரசு தன்னிச்சையாக ரத்து செய்து தேர்ச்சி அளிக்க வேண்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்