தேவகோட்டை அருகே வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே தாணிச்சா ஊருணியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (26). இவரும், இவரது தாயார் சித்ராவும் (55) நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

அதில் ஒன்று சித்ரா தலையில் விழுந்து வெடித்தது. இரண்டு வெடிகுண்டுகள் வீட்டின் சுவரில் பட்டு வெடித்தன. ஒன்று மட்டும் வெடிக்கவில்லை. காயமடைந்த சித்ரா தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சிவகங்கை எஸ்.பி.ரோஹித்நாதன், தேவகோட்டை உதவி எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அங்கிருந்த வெடிக்காத நாட்டு வெடிகுண்டு ஒன்றை போலீஸார் கைப்பற்றினர்.

இதுகுறித்து ஆறாவயல் போலீஸார் கூறுகையில், ராஜபாண்டிக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதமே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்