இ-பாஸ் விற்பனை- போலீஸில் புகார் அளிக்கலாம்

By செய்திப்பிரிவு

இ-பாஸ் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய 3 காரணங்களுக்காகவும், சில தவிர்க்க முடியாத காரணங்களுக்கும் வெளியூர் செல்லஇ-பாஸ் வழங்கப்படுகிறது.

நியாயமான காரணங்களுக்காக விண்ணப்பிக்கும் 90 சதவீதம் பேரின் இ-பாஸ் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இதனால் பணம் பெற்றுக் கொண்டு சிலர் மிக எளிதாக இ-பாஸ் வாங்கி கொடுப்பதாக கூறப்படுகிறது. விமான நிலையங்களிலும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் இ-பாஸ் வாங்கி கொடுப்பதற்காக சில இடைத்தரகர்கள் சுற்றி வருவதாக காவல் துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ‘இ-பாஸ் விற்பனை செய்பவர்கள் குறித்து புகார் கொடுத்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இ-பாஸ் விற்பனை செய்பவர்கள்குறித்து காவல் கட்டுப்பாட்டுஅறை எண் 100-க்கு தொலைபேசியில் கூட தகவல் கொடுக்கலாம்’ என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்