செல்போனை பறித்து பைக்கில் தப்பிய திருடனை விரட்டி பிடித்த இளம்பெண்: காவல் ஆணையர் வெகுமதி வழங்கி பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் கீதப்பிரியா. இவர் காஞ்சிபுரத்திலுள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 20-ம் தேதி காலை 6 மணிக்கு அலுவலக வாகனத்துக்காக அசோக்நகர், 11-வது சாலையில் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 2 பேர், கீதப்பிரியாவின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். அதிர்ச்சி அடைந்த கீதப்பிரியா, அருகிலிருந்த ஆட்டோவில் ஏறி துரத்திச் சென்றார்.கே.கே.நகர், ஈஎஸ்ஐ. மருத்துவமனை அருகில் பைக்கின் குறுக்கே ஆட்டோவை நிறுத்தியபோது, பின்னால் அமர்ந்திருந்த நபர் தப்பிவிட்டார். பைக்கில்இருந்த திருடனைப் பிடித்து, குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தப்பியோடியவரும் பிடிபட்டார். இருவரும் ராமாபுரத்தைச் சேர்ந்த 17 மற்றும் 16 வயதுள்ளசிறார்கள் என்பது தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து மேலும்2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

துணிச்சலுடன் செயல்பட்ட கீதப்பிரியாவை, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்