மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு: திமுக எம்.பி.க்கள் பதவி ஏற்கவில்லை

By செய்திப்பிரிவு

தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 61 பேர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் தமிழகத்திலிருந்து 6 எம்.பி.க்கள் பதவி ஏற்கவேண்டிய நிலையில் திமுக எம்.பி.க்கள் மட்டும் பதவி ஏற்கவில்லை.

நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மாநிலங்களவை உறுப்பினர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் மாநில வாரியாக உறுப்பினர்களுக்கு எண்ணிக்கை வேறுபடும்.

இதில் தமிழகத்துக்கு 18 எம்.பி.க்கள் மொத்தமாக உள்ள நிலையில் 6 எம்.பி.க்கள் வீதம் மூன்று அடுக்குகளாக உறுப்பினர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தேர்வு செய்யப்படுவார்கள். மாநிலங்களவைக்கு ஒவ்வொரு 2 ஆண்டுகள் இடைவெளியில் தேர்தல் நடக்கும். கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் காலியான 6 எம்.பி.க்கள் பதவியுடன் சேர்த்து இந்தியா முழுவதும் 61 எம்.பி.க்களுக்கான தேர்தல் கரோனாவுக்கு முன்னரே நடந்து முடிந்தது.

இதில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஏற்கெனவே பதவியேற்றிருக்க வேண்டிய நிலையில், கரோனா காரணமாக டெல்லிக்குப் போக்குவரத்து வசதி ரத்து செய்யப்பட்டதால் பதவியேற்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இதில் பதவி ஏற்கவுள்ள பல உறுப்பினர்கள் நிலைக்குழுக்களின் தலைவர்களாக உள்ள நிலையில் எம்.பி.க்கள் பதவி ஏற்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக எம்.பி.க்கள் உள்ளிட்ட இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் டெல்லியில் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு முன் பதவி ஏற்றனர்.

இதில் தமிழகத்தில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் பதவி ஏற்றனர். திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் இளங்கோவன் உள்ளிட்டோர் பதவி ஏற்கவேண்டும். ஆனால் அவர்கள் பதவி ஏற்கவில்லை.

புதிய உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு முகக்கவசம் அணிந்த நிலையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கூட்டத்தொடர் நடைபெறாத காலத்தில் மாநிலங்களவை அறையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

தற்போதுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் விவரம்:

1 வைகோ, மதிமுக (திமுக) ஜூன் 2025 வரை
2 எம்.சண்முகம், திமுக ஜூன் 2025 வரை
3. பி. வில்சன், திமுக ஜூன் 2025 வரை
4 சந்திரசேகரன், அதிமுக ஜூன் 2025 வரை
5. ஏ. முகம்மது ஜான், அதிமுக ஜூன் 2025 வரை
6. அன்புமணி ராமதாஸ், பாமக (அதிமுக) ஜூன் 2025 வரை
7. நவநீத கிருஷ்ணன், அதிமுக 29 ஜூன் 2022 வரை
8. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், அதிமுக 29 ஜூன் 2022 வரை
9. ஆர்.எஸ்.பாரதி, திமுக 29 ஜூன் 2022 வரை
10. விஜயகுமார், அதிமுக 29 ஜூன் 2022 வரை
11. ஆர்.வைத்திலிங்கம், அதிமுக 29 ஜூன் 2022 வரை
12. டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக 29 ஜூன் 2022 வரை

தற்போது விஜிலா சம்பத், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ், டி.கே.ரங்கராஜ், திருச்சி சிவா, முத்துக்கருப்பன் ஆகியோர் பதவி நிறைவடைந்ததை அடுத்து புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள்:

1. திருச்சி சிவா, திமுக ஏப்.2026 வரை

2. அந்தியூர் செல்வராஜ், திமுக ஏப்.2026 வரை

3. இளங்கோவன், திமுக ஏப்.2026 வரை

4. தம்பிதுரை, அதிமுக ஏப்.2026 வரை

5. கே.பி.முனுசாமி, அதிமுக ஏப்.2026 வரை

6. ஜி.கே.வாசன், தமாகா (அதிமுக) ஏப்.2026 வரை

இவர்களில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்று பதவி ஏற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்