கரோனா தொற்றால் 2 டாஸ்மாக் பணியாளர்கள் உயிரிழந்ததால் பணிப் பாதுகாப்பு கேட்டு பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் நேற்று (ஜூலை 21) வரை கரோனா தொற்றால் 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,551 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ராஜா நேற்று (ஜூலை 20) இரவும், செஞ்சி அருகே வடதரம் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் இன்று (ஜூலை 21) அதிகாலையும்சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இதற்கிடையே இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 226 டாஸ்மாக் கடைகளை மூடிய அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர், விழுப்புரம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
» ஆம்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அஸ்லாம் பாஷா காலமானார்; கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி
» கஷ்டத்தில் திமுக தொண்டர்; கைகொடுத்த சிங்கப்பூர் நண்பர்!- முகநூல் வழியே இப்படியும் செய்ய முடியும்
இதையறிந்த மண்டல மேலாளர் முருகன், டாஸ்மாக் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், வாரிசு அடிப்படையில் பணி, கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு டாஸ்மாக் நிர்வாகம் மருத்துவச் செலவுகளை ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago