புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் இன்று ஒரு மணி நேரம் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உள்ள சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியிலிருந்த சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகள் குறித்து ஆவேசமாகத் தொடர்ந்து கேள்விகள் எழுப்பினார். இதற்குக் கண்டனங்களும் எழுந்தன.
துணைநிலை ஆளுநரின் இந்த நடவடிக்கை கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களைப் பாராட்டும் வகையில் இல்லாமல் குற்றவாளிகள் போல ஆக்கிவிட்டதாகக் கூறி, ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து புதுச்சேரி அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று (ஜூலை 20) காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 21) காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மற்றும் அனைத்துச் சுகாதார நிலையங்களிலும் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை புறநோயாளிகள் பிரிவுப் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வாயிலில் கருப்பு பேட்ஜ் அணிந்து துணைநிலை ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago