மின் கட்டண உயர்வைக் கண்டித்து விருதுநகரில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இல்லத்திற்கு முன்பாக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா காலத்திலும் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழக அரசை கண்டித்தும் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வீடுகளில் இருந்தபடியே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தார்.
இதனையொட்டி திமுகவினர் தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
விருதுநகரில் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் அவரது விருதுநகர் இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் 'அதிமுக ஆட்சியின் அவலங்கள்' என சிலவற்றைப் பட்டியலிட்டு துண்டு பிரசுரங்களை வீதி வீதியாக திமுகவினர் வழங்கினர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago